A Voice from Palestine

M. A. Nuhman


[Israeli defence minister says: ‘‘We are fighting with human animals” and prime minister Netanyahu says in his address to the nation: ‘‘Israel is fighting with the enemies of civilization … This war is between the forces of civilization and the forces of barbarism’’This poem is in response to their utterances.] 

You say, 
You are fighting with human animals and 
That’s how they should be dealt with.
Yes, you can only speak like that.
Your brain is benumbed.
Your heart is parched.

Do not insult animals
Animals are friends of people.
You and I cannot live in this world 
without animals.
Do not insult animals.
 
Animals do not encroach and occupy others’ lands.
Animals do not bomb and kill people.
Animals do not rob a country.
Animals do not chase people out of their homes.
They do not destroy villages.
They do not make people refugees.
Do not insult animals.
Think who you are
and how you came here,
how you chased us out,
how you killed us,
how you destroyed our villages,
how you made refugees of us,
how you imprisoned us.
Think of these, if you can. 
 
You have lost your memory.
Your conscience is dead.
Your heart is parched.
Your brain is benumbed.
You say we are terrorists.
You say we are human animals.
Do not insult animals.
 
Is it not you that shattered our peace?
Is it not you that destroyed our beehive?
Is it not you that felled our olive trees?
Is it not you that forced us to take up arms?
Is it not you that made our children pick up stones?
Now, you say we are terrorists.
We are human animals.
Do not insult animals.
 
You say 
‘We are fighting the enemies of civilization’
and you say 
‘This war is between forces of civilization
and forces of barbarism’.
Is it not the joke of the century?
Are you saying what I should be saying?
Is not Satan reciting the scriptures?
Is it not you
that is the worst enemy of human civilization
that travels along the same path as Hitler 
following him?
 
The big terrorists of the world 
support you, but 
open your eyes to see
people with a sense of justice
rise against you around the world. 
Your own people with a sense of justice
rise against you in your own country.
Your end is near. 
 
Tyrants cannot survive forever.
History will spit on them.
You follow their line.
Your end is near.
 
Your conscience is dead.
Your heart is parched.
Your brain is benumbed.
Your mind is confused.
You have lost your memory. 
  
You say that we are human animals,
barbarians and enemies of civilization.
You seek to destroy us completely and 
dream of a peaceful sleep.
 
That will not happen 
as long as a drop of justice
survives in this world.
It cannot happen.
There is no peace for the one who destroys the peace of others.
There is no freedom for the one who robs others of their freedom.
You may kill more and more of us
by dropping
thousands and thousands of bombs.  
But we will rise again and again
from the rubble 
from the ashes 
to shatter your dream.
 
Cast away your arms into the Red Sea
and approach me with an
olive branch, and
I will forgive your sins of 
seventy-five years and embrace you.
I will offer you a place to live in my land
so that
we may sleep and wake up peacefully in our homes.
Are you ready for that?
 
Let your heart moisten.
Let feeling sprout in you.
Let clarity fill your mind.
Are you ready for that?
Are you ready 
to throw your arms into the sea and
come to me with an olive branch?
Until then the dispersed bees 
Will continue to chase you and
continue to disturb you.
 
Do not dream of destroying us completely.
That will not happen 
as long as a drop of justice
survives in this world.
It cannot happen.

நீ சொல்கிறாய்
நாங்கள் மனித விலங்குகளுடன் போரிடுகிறேம் என்று
அவர்களை அப்படித்தான் நடத்தவேண்டும்
என்று சொல்கிறாய்
நீ அப்படித்தான் சொல்வாய்
உன் மூளை மரத்துவிட்டது
உன் இதயம் காய்ந்துவிட்டது

விலங்குகளை அவமதியாதே
விலங்குகள் மனிதரின் தோழர்கள்
விலங்குகள் இல்லாத உலகில்
நீயும் நானும் வாழமுடியாது
விலங்குகளை அவமதியாதே

விலங்குகள் ஆக்கிரமிப்பதில்லை
விலங்குகள் குண்டுவீசி மனிதரைக் கொல்வதில்லை
விலங்குகள் ஒரு தேசத்தை அபகரிப்பதில்லை
விலங்குகள் மனிதரைத்
தங்கள் வீடுகளை விட்டுத் துரத்துவதில்லை
கிராமங்களை நிர்மூலமாக்குவதில்லை
விலங்குகள் மனிதரை அகதிகளாக்குவதில்லை
விலங்குகளை அவமதியாதே

நீ யார் என்று யோசித்துப்பார்
நீ எங்கிருந்து வந்தாய்
எப்படி இங்குவந்தாய்
என்பதை எண்ணிப்பார்
எப்படி எங்கள் மண்ணில் காலூன்றினாய்
எப்படி எங்களைத் துரத்தினாய்
எப்படி எங்கள் கிராமங்களை அழித்தாய்
எப்படி எங்களைக் கொன்றுகுவித்தாய்
எப்படி எங்களை அகதிகளாக்கினாய்
எப்படி எங்களைச் சிறையில் அடைத்தாய்
என்பதை எண்ணிப்பார்

உனக்கு எல்லாம் மறந்துவிட்டது
உன்மனச்சாட்சி மடிந்துவிட்டது
உன் இதயம் காய்ந்துவிட்டது
உன் மூளை மரத்துவிட்டது
நீ எங்களைப் பயங்கரவாதி என்கிறாய்
மனித விலங்குகள் என்கிறாய்
விலங்குகளை அவமதியாதே

எங்கள் அமைதியைக் குலைத்தவன்
நீ இல்லையா
எங்கள் தேன்கூட்டைக் கலைத்தவன்
நீ இல்லையா
எங்கள் ஒலிவ மரங்களை அழித்தவன்
நீ இல்லையா
எங்களைத் துப்பாக்கி தூக்கவைத்தவன்
நீ இல்லையா
எங்கள் குழந்தைகளைக் கல்பொறுக்கவைத்தவன்
நீ இல்லையா
இப்போது நீ எங்களைப் பயங்கரவாதி என்கிறாய்
மனித விலங்குகள் என்கிறாய்
விலங்குகளை அவமதியாதே

நீ சொல்கிறாய்
நாங்கள் நாகரீகத்தின் எதிரிகளுடன்
போரிடுகிறோம் என்று
இது நாகரீக சக்திகளுக்கும்
காட்டுமிராண்டிகளுக்கும்
இடையிலான போர் என்று சொல்கிறாய்
இந்த நூற்றாண்டின் பெரிய நகைச்சுவை
இல்லையா இது
நான் சொல்லவேண்டியதை நீ சொல்கிறாயா
சாத்தான் வேதம் ஓதுகிறதா
ஹிட்லருக்குப் பிறகு
அவன்பாதையில் செல்லும்
மனித நாகரீகத்தின் மோசமான எதிரி
நீ இல்லையா

உலகின் பெரிய பயங்கரவாதிகள்
உன்னை ஆதரிக்கிறார்கள்
ஆனால் உன் கண்களைத் திறந்துபார்
நீதி உணர்ச்சி கொண்ட மக்கள்
உலகெங்கும் உனக்கெதிராகக்
கிளர்ந்தெழுகிறார்கள்
நீதி உணர்ச்சி மிக்க உன் சொந்த மக்களே
உனக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள்
உங்கள் முடிவு நெருங்கிவிட்டது

அநியாயக் காரர்கள் நிலைத்திருப்பதில்லை
வரலாறு அவர்களைக் காறி உமிழ்கிறது
அந்த வரிசையில் நீ வந்துநிற்கிறாய்
உன் முடிவு நெருங்கிவிட்டது

உன் மனச்சாட்சி மடிந்துவிட்டது
உன் இதயம் காய்ந்துவிட்டது
உன் மூளை மரத்துவிட்டது
உன் சித்தம் கலங்கிவிட்டது
உனக்கு எல்லாம் மறந்துவிட்டது

நீ எங்களை மனித விலங்குகள் என்கிறாய்
காட்டுமிராண்டிகள் என்கிறாய்
நாகரீகத்தின் எதிரி என்கிறாய்
எங்களை முற்றாக அழித்துவிட
ஆசைப்படுகிறாய்
எங்களை அழித்துவிட்டு
நிம்மதியாய்த் தூங்கலாம்
எனக் கனவுகாண்கிறாய்

அது நடக்காது
உலகில் ஒரு துளி நீதி இருக்கும்வரை
அது நடக்காது
பிறரின் அமைதியைக் குலைத்தவனுக்கு
ஏது அமைதி
பிறரின் சுதந்திரத்தைப் பறித்தவனுக்கு
ஏது சுதந்திரம்

இன்னும் இன்னும்
ஆயிரம் ஆயிரம்
குண்டுகளை வீசி
நீ எங்களை அழிக்கலாம்
அந்த  இடிபாடுகளில் இருந்து
அந்தச் சாம்பலில் இருந்து
மீண்டும் மீண்டும்
நாங்கள் உயிர்த்தெழுவோம்
உன் கனவுகளைக் கலைப்போம்

உன் ஆயுதங்களை செங்கடலில் வீசிவிட்டு
ஒரு ஒலிவம் கிளையைக் கையில் எடுத்துக்கொண்டு
என்னை நோக்கிவா
எழுபத்தைந்து வருடகால
உன் பாவங்களை நான் மன்னித்துவிடுகிறேன்
உன்னை அரவணைத்துக்கொள்கிறேன்
என் மண்ணில் வாழ உனக்கும் இடம் தருகிறேன்
நாம் நம் வீடுகளில் நிம்மதியாகத் தூங்கி எழலாம்
அதற்கு நீ தயாரா

உன் இதயத்தில் ஈரம் கசியட்டும்
உன் உணர்வு துளிர்க்கட்டும்
உன் சித்தம் தெளியட்டும்
அதற்கு நீ தயாரா

உன் ஆயுதங்களைக் கடலில் வீசிவிட்டு
ஒரு ஒலிவம் கிளையுடன் வர நீ தயாரா

அதுவரை கலைக்கப்பட்ட தேனீக்கள்
உன்னைத் துரத்திக்கொண்டே இருக்கும்
உன் காதில் இரைந்துகொண்டே இருக்கும்
எங்களை முற்றாக அழித்துவிடலாம்
என்று மட்டும் கனவுகாணாதே
அது நடக்காது
உலகில் ஒரு துளி நீதி இருக்கும்வரை
அது நடக்காது

01. 11. 2023
 
Translated from Tamil by M. A. Nuhman and S. Sivasegaram
 
M. A. Nuhman is a poet, literary critic and translator who has published more than 30 books. He retired as Professor of Tamil at the University of Peradeniya, Sri Lanka. His poem ‘Murder’ (Buddharin Padukolai‘ in the Tamil-language original) is a highly acclaimed protest of the 1981 burning of the Jaffna Public Library. 
 
Image Source: https://bit.ly/3RzUQMi