சமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்
அரசியல் ரீதியாக மாற்றமுறும் பின்னணினுள் நாட்டின் அரசியல் விவாதத்தை சனநாயக ரீதியில் வலுவூட்டுவதற்குப் பங்களிப்புச் செய்யும் பொருட்டு இவ்வாறான கல்வி நூல்களை வெளியிடுவதற்குத் தீர்மானித்தோம். எளிமையாக எழுதப்பட்டு சிறுநூல் வடிவில் வெளியிடப்படுகின்ற இவ்வெளியீட்டுத் தொடரில் எமது நாட்டின் தற்போதைய அரசியல் விவாதத்தின் மையத்திலுள்ள பிரச்சனைகளே தொனிப்பொருள்களாயுள்ளன. சமஷ்டி முறை மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை ஆகிய இரண்டு விடயங்களும் இச்சிறு நூலின் தொனிப்பொருள்களாகும்.
இலங்கைக்கு எவ்வாறான சமஷ்டி முறை பொருத்தமானது என்பதை எமது நாட்டின் அரசியல் சக்திகளும் அதேபோன்று பொதுமக்களுமே தீர்மானித்தல் வேண்டும். அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு இந்நாட்டு மக்களுக்குள்ள அரசியல் ஆற்றலை வலுவூட்டும் பொருட்டு அறிவுரீதியான பங்களிப்பைச் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்.