நாடும் நமது போக்கும்
இலங்கை அரசியல் 2007-2008
இந்த ஒற்றை வரைவுநூல், 2007 – 2008இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சி நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்தி மதிப்பீடு செய்கிறது. நாட்டின் அரசியல் செயன்முறைகளின் போக்குகளையும் சாய்வுகளையும் அதன் கவனிப்புக்குட்படுத்துகிறது. இந்த ஆய்வில் மேற்கொள்ளப்படும் விவாதம் அனேகமாக இனத்துவ மோதலையும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தையும் மையமாகக் கொள்கிறது. இந்த விவாதமானது யுத்தம், இனத்துவ மோதல் மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சிகள் என்கிற பாரிய மையப்பொருட்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் 2007-2008 இன் போக்குகளை பரந்த அரசியல் பின்னணியில் வைத்துப் பார்ப்பதற்கு ஏதுவாக முன்னைய ஆண்டுகளின் நிகழ்வுகளை நோக்கியும் திரும்பிச் செல்கிறது.
இந்நூல் இலங்கையின் வருடாந்த அரசியல் விமர்சனத் தொடரின் ஆரம்பமாக நிற்கிறது.