Aann Thalamai Aatchi Entral Enna?

ஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன?

Category:

ஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன?

பெண்ணிலைவாதம் தொடர்பான சில பிரச்சனைகளும் தென்னாசியாவில் அதன் பொருத்தமுடைமையும் என்ற மிகப் பிரபல்யம் பெற்ற நூலின் ஆசிரியர் எழுதிய இச்சிறுநூலில் துல்லியமான எளிதில் கிரகித்துக்கொள்ளக் கூடிய நடையில் ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறையின் பல்வேறு இழைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. கேள்வி – பதில் வடிவத்தில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கீழ்ப்படிவானவர்களாக இருக்கிறார்கள் என்ற பெண்ணிலைவாதிகளின் சிந்தனைப்பகுப்பாய்வை கொண்டு ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறைமையை இச்சிறுநூல் அறிமுகஞ் செய்கிறது.  பெண்ணடிமைத்தனம் எவ்வாறு அமைகின்றது, எவ்வாறு தோன்றியது, எவ்வாறு வரலாற்றுரீதியாக உலகின் பல பாகங்களிலும் உருவாகியதென்பதையும் இது விளக்குகிறது. ஆண் தலைமை  ஆட்சிச் சமுதாய முறைமையானது, முக்கியமான சமூக நிறுவனங்களையும் அரசியல் நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கெதிராகப் பாரபட்சம் காட்டும் விசேஷ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இவற்றுக்கெதிராக, சமூக மாற்றங்கள் கோரிப் பெண்கள் மேற்கொண்ட போராட்டங்களை இனங்காண்பதற்கும் இந்நூல் முயல்கிறது.